June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் மருத்துவ முகாம் நடைபெற்றது!

புதுச்சேரி, ஜூன் 15:

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வெஸ்ட்மேட் மருத்துவமனை இணைந்து விளையாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகள்,பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் நல்லெண்ணெய் கருதி அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை இன்று நடத்தினர்.

இந்த மருத்துவ முகாம் உப்பளத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

முகாமில் ரத்த சர்க்கரை (RSB Test), ஹீமோகுளோபின் பரிசோதனை, இரத்த அழுத்தம் (BP), இதய மின் அலைவரைவு (ECG) உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்களுக்கும், ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த முகாம் ஊழியர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.