புதுச்சேரி, ஜூன் 14:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதனையொட்டி புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மீன்பிடி படகுகளுக்கு கொடியசைத்து மீன்பிடி பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் உடனிருந்தார்.
60 நாள் தடைக்காலத்திற்குப் பிறகு மீண்டும் கடலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது மீன்பிடி பணியை தொடங்கினர். இதன் மூலம் பொதுமக்களுக்கு மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் புதுச்சேரி மீன்பிடித் துறை மற்றும் மீன் விற்பனை வர்த்தகமும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!