June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உலக ரத்ததான தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை ரத்தவங்கி சார்பில் இரத்ததான தன்னார்வர்களை கௌரவப்படுத்த விழா நடைபெற்றது.புதுச்சேரியில் அதிகமுறையாக 107 முறை ரத்ததானம் வழங்கிய சமூக சேவகரும், பாரதிய ஜனதா கட்சி வில்லியனூர் மாவட்ட பொறுப்பாளருமான வெற்றிச்செல்வம் அவர்களை பாராட்டி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத்குமார், பேராசிரியர் குல்கர்னி, ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் அபிஷேக், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் வடிவேல், லயன்ஸ் கிளப் நிர்வாகி செல்வகாந்தி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுவழங்கி கௌரவப்படுத்தினர்.இரத்த தானத்தின் அவசியம் பற்றி வெற்றிச்செல்வம் அவர்கள் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.மேலும் முதல் முறையாக ரத்ததானம் அளிக்கும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் வாய்ப்பினை ஜிப்மர் நிர்வாகம் வெற்றிச்செல்வதற்கு வழங்கி கௌரவப்படுத்தியது.

தங்கள் அன்புள்ள,
க. வெற்றிச்செல்வம்.