புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உப்பனாரு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தகடந்த வாரம் மாண்புமிகு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.10.06.2026.இன்று நடைபெற்று வரும் பணிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்நேயம் மக்கள் கழக தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்.மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் சொல்லியது போல் பணிகள் துரிதமாக நடைபெறுகிறதா என்று பொதுப்பணித்துறை அரசு செயலர் முத்தம்மா IAS அவர்களும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்வீரசெல்வம் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் உப்பனாரு வாய்க்காலில் பணிகள் நடைபெறுவதற்காக கொட்டி உள்ள மண்ணை அகற்றுதல் மற்றும் உப்பனாரு வாய்க்கால் கீழ் உள்ள சேர்களை வாறுதல் மேலும் மழை காலங்களில் மழைநீர் எளிதாக செல்லும் வகையில் கரை ஓரங்களில் உள்ள செடி கொடிகளையும் குப்பை கூலங்களையும் அகற்றுதல் போன்ற பணிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்சீனிவாசன் ராஜ்குமார்சுந்தரி மற்றும் உதவி பொறியாளர்கள்,இளநிலை பொறியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!