June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி:

புதுச்சேரி நடிகர் சங்கத் தலைவரும், மொபைல் ஜூ ஷோரூம் உரிமையாளருமான நடிகர் பாண்டி செல்வம் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, புதுச்சேரி ராயல் பார்க் ஆட்டோ ஸ்டாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் பாண்டி செல்வம் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.

மேலும், புதுச்சேரி முழுவதும் உள்ள முக்கிய பிரதானங்களில் அமைந்துள்ள அனைத்து ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் சீருடைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வருடத்தின் 365 நாட்களிலும், பசி என்று வரும் யாராக இருந்தாலும் அவர்களின் பசியை தீர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நடிகர் பாண்டி செல்வம் அவர்களின் இந்த சேவை மனப்பான்மை பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

அவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து கொண்டாடினர்.