June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,09/06/2026.

சேலம் ஓமலூரில் – குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் கிராம மக்கள் மூன்று மாதங்களாக குடிநீர் இல்லை, தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை என புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த உத்தரவாதத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

அதேபோல அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி பகுதியிலும் மின்வெட்டு பிரச்சனை தொடர்பாகவும் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.