June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியை வ.தேவகியம்மாள் தலைமையில் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது...

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் சு.வினோதினி மற்றும்
சிறப்பு உதவி ஆய்வாளர் மு.பாலசுப்பிரமணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்…
மாணவ,மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி ஏற்று கொண்டனர்…