June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மூன்று சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி ஜுன் 04

திருச்சி ஜங்ஷன் காதி கிராஃப்ட் அருகில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர், புறநகர் மாவட்ட குழு சார்பில் வணிக பயன்பாடு, சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மக்களின் வாழ்க்கை மீதான மோடி அரசின் தாக்குதலை கண்டித்து மூன்று சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இவ் ஆர்ப்பாட்டதிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர்
தலைமை வகித்தனர்
மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி மாவட்ட பொருளாளர் செல்வகுமார் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் பெரியசாமி மாநில செயற்குழு செல்வராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர், இந்திரஜித் ஏஐடியூசி மாவட்டச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்புறநகர்மாவட்டபொருளாளர்
ஜனசக்தி உசேன் ஆகியோர் கண்டன உரை நிகழ்தினார்கள்

ஜங்ஷன் பகுதிச் செயலாளர் அஞ்சுகம் நன்றி கூறினார்

முன்னதாக. மூன்று சக்கர வாகனத்தை கையிறு கட்டி இழுத்து வரும்போது காவல் துறை க்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் முரன்பாடு ஏற்பட்டது கண்டன முழக்கத்தோடு வாகனத்தை இழுத்து வந்து போராட்டத்தை நடத்தினர்