June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளிபாளையம் குமாரபாளையம் சாயப்பட்டறைகள் சட்ட விதி மீறி செயல்பாடுகள்…

நேரில் ஆய்வு செய்த துறை அமைச்சர் வி. கே ராஜீவ் அதிகாரிகள்__ உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை…

நீதிகநிர் நாளிதழில் ஒரு வாரத்திற்கு முன்பு விரிவான செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது…

பள்ளிபாளையம். ஜூன். 04

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த சுத்திகரிக்கப்படாத கலவி நீரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாயப்பட்டறைகளின் செயல்பாடுகள் குறித்தும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மருத்துவர். வி. கே ராஜீவ் நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி உடன் இருந்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் அதிக அளவு சாய மற்றும் சலவை பட்டறைகள் இயங்கி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிகளில் பெரிய அளவில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள், சலவை பட்டறைகள் செயல்பட்டு வந்தன.

அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வும், அதிகாரிகளின் ஆய்வு நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்து வந்தது.

இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட சாயப்பட்டறைகள் உரிமையாளர்கள், இரவு பகல் என 24 மணி நேரமும் தங்களின் சாயப்பட்டறைகளை இயக்கி வந்தனர். அதோடு சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த சாயா பவுடரை பயன்படுத்தி வந்த இவர்கள், தங்களின் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும், சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த சாய கழிவு நீரை அப்படியே நேரடியாக அருகில் இருக்கும் விவசாய நிலங்களிலும், நீர் நிலைகளிலும் வெளியேற்றி வந்தனர். இதன் காரணமாக பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள விவசாய விலை நிலங்களும், நீர்நிலைகளும் ரசாயனம் கலந்த கல்வி நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்தது.

அதோடு அருகில் உள்ள காவேரி ஆற்றிலும் இவர்கள் இந்த சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த கழிவு நீரை நேரடியாக ஆற்றில் விடுவதால் ஆற்றை நீரும் மாசடைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து மிதப்பதோடு, காவேரி ஆற்று தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களும் கால்நடைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி மக்களுக்கு, இந்த சாயப்பட்டறைகளின் சாய கல்வி நீரால் ஏற்படும் பாதிப்புகள் மிகத் தாமதமாக தெரியவந்து மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தனர்.

அன்று முதல் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளுக்கு எதிராக பொதுமக்களும், சமூக அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த சுமார் 15 ஆண்டு காலமாக இந்த போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நடந்து வந்தாலும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பது இதுவரை தேர்வு என்பது எட்டப்படவில்லை.

மேலும் ஒரு இருபது ஆண்டு காலமாக இத்தகைய சாயக்கழிவு நீரால், காவேரி ஆறு, அப்பகுதியில் உள்ள நிலங்கள், நீர் நிலைகள் மோசமாக பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் புற்றுநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு நோய்களை உடலில் சுமந்து ஒரு நடை பிணமாக இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் செய்ய முடியாமலும் வளர்க்க முடியாமலும் பாதிக்கப்பட்டு பெரும் பொருளாதார பின்னடைவையும் இந்த மக்கள் என்று சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து குமாரபாளையத்திற்கு தனியாக ஒரு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் துவங்கப்பட்டது.

இந்த அலுவலகத்தில் அதிகாரிகளாக இருந்தவர்கள் ரசாயன கழிவு நீரால் மாசை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, கல்லா கட்டுவதையே குறிக்கோளாக வைத்திருந்தனர்.

குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.

தற்போது குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக இருந்து வரும் செல்வகணமதியும் சாயப்பட்டறை உரிமையாளர்களின் கவனிப்பார் சற்று கண்ணயர்ந்து தான் காணப்படுகிறார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெரிய அளவில் ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அது குறித்த ஒரு விரிவான செய்தியை, இந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நீதிக்கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழில் எட்டு கால செய்தியாக விரிவாக செய்து வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தியானது குமாரபாளையம் மற்றும் சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போது பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் விஜயலட்சுமி அவர்களின் கவனத்திற்கும் அந்த செய்தி கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மருத்துவர். வி. கேராஜீவ் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு நகர், வசந்த நகர், முனியப்பன் கோவில், பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகள் மற்றும் அக்ரஹாரம், ஆவத்திபாளையம், சமய சங்கிலி உள்ளிட்ட சாயப்பட்டறைகள் அதிகம் செயல்பட்டு வரும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சாயப்பட்டறைகளின் செயல்பாடுகள் மற்றும் சுத்திகரிப்பு செய்யப்படும் இடங்கள் வெளியேற்றப்படும் சாய கழிவுநீர் ஆகியவற்றை துல்லிதமாக அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகளும் சுத்திகரிக்கப்படாமல் ரசாயனம் கலந்த சாயக்கழிவுநீர்கள் வெளியேற்றப்படுவதையும் கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும், சாயப்பட்டறை உரிமையாளர்களையும் அமைச்சர் வி கே ராஜுவ் கடுமையாக எச்சரித்தார். தொடர்ந்து இதுபோன்ற சாயப்பட்டறை கழிவுநீர்கள் வெளியேற்றப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழக பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி, நாமக்கல் ஆட்சியர் மதுபாலன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது அரசின் விதி மீறி செயல்பட்ட ஒரு சாயப்பட்டறையில் மின் இணைப்பை ஆட்சியர் மதுபாலன் துண்டித்தார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் இந்த அதிரடி நேரடி ஆய்வால் சாயப்பட்டறை உரிமையாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.