வந்தவாசி, ஜூன் 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வந்தவாசி பாலாம்பாள் ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். தீயணைப்புத் துறை செயல் அலுவலர் மு.பிரபாகரன், தொழிற்பயிற்சி நிர்வாகி தனசேகரன், வெண்குன்றம் பாரத் வித்யாலயா பள்ளி நிர்வாகி ச.காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐடிஐ முதல்வர் என்.எஸ்.குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, நகராட்சி ஆணையர் வீர வாஞ்சிநாதன் பங்கேற்று, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை பற்றிய விழிப்புணர்வு தகவல்களை விளக்கினார். மேலும் நெகிழி பயன்பாடுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், மரங்களை நட்டு சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாப்பதில் மாணவர்களுக்கு அதிகம் பங்கு உண்டு என்று வலியுறுத்தினார். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு பற்றி விளக்கினார். சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனித சங்கிலியுடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், தரணி கார்டன் நிர்வாகி தரணி, தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி, குறும்பட உதவி இயக்குநர் முகமது ஜியா, ஆசிரியர் மஹாவீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் வந்தை பிரேம் நன்றி கூறினார்.


More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்