முத்தமிழறிஞர் கலைஞர் 103வது பிறந்த நாள் விழா
திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்
திமுக–வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
பத்திரிகை செய்தி
தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி மாநில திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று காலை 08.00 மணியளவில் வில்லியனூர் தொகுதி திமுக சார்பில், தொகுதி செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் வில்லியனூர் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மணவெளி தொகுதி திமுக சார்பில், தொகுதி செயலாளர் ராஜாராமன் ஏற்பாட்டில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதியில் பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் ஏற்பாட்டில், வீராம்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏஎப்டி திடலில் ஒன்றிணைந்து தி.மு.கழகத்தின் இரு வண்ணக் கொடியேந்தி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் மாநில கழகம் சார்பில் அமைப்பட்டிருந்த கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பில் மேரி ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், திமுக அமைப்பாளரும், மேனாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல், புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி கழகங்கள் சார்பில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பாகூர் தொகுதியில் திமுக பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., தலைமையில் பல்வேறு கிராமங்களில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, 1500 நபர்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், மாநில துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், ந. தங்கவேலு, பெ. வேலவன், ரவீந்திரன், எஸ். தர்மராஜன், பெ. பழநி, எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ப. வடிவேல், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், செ. சத்தியவேலு, முருகதாஸ், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், விவசாய அணி வெ. குலசேகரன், மீனவர் அணி ந. கோதண்டபாணி, நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொமுச அண்ணா அடைக்கலம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், வர்த்தகர் அணி சு. ரமணன், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, சுற்றுச்சூழல் அணி த. முகிலன், அயலக அணி அ. ஷாஜகான், அணிகளின் தலைவர்கள் செல்வா, கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்கள் வர்த்தகர் அணி இரா. குரு (எ) சண்முகசுந்தரம், இலக்கிய அணி வி.எஸ். பாண்டியன், மகளிர் அணி வெ. பிரியதர்ஷினி, மகளிர் தொண்டர் அணி ரா. விஜயலட்சுமி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை ராஜேஷ், சுற்றுச்சூழல் அணி நவீன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், கிருபாசங்கர், பஜிலுதீன் மற்றும் அணிகளின் துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், மொழிப்போர் தியாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.
படவிளக்கம்
அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்தப்படம்.
அடுத்தப்படம்: – அண்ணா சிலை அருகில் மாநில கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவப் படத்திற்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!