பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
புதுச்சேரி அரசு
புதுச்சேரி
2 . உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியரகம்
புதுச்சேரி
பொருள்: தாய் வழி சான்று வைத்துள்ள மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்பில் சூப்பர் நியூமரி அடிப்படையில் தற்காலிக வாய்பு வழங்குமாறு கோரிக்கை
மாண்புமிகு ஐயா,
1. பின்னணி
புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் தாய் வழி சான்று மற்றும் பூர்வகுடி சான்று என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதில் நிலவும் குழப்பம் காரணமாக, தகுதியான நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி சேர்கை மற்றும் அரசு பணி வாய்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வெவ்வேறு நிலைப்பாடுகள் இந்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளன.
2. மாணவர்களின் நிலை
தாய் வழி சான்று அடிப்படையில் சென்ற கல்வி ஆண்டு சில மாணவர்கள் பயனடைந்து வந்தனர் இதற்கிடையில் மத்திய அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில் தாய் வழி சான்று நிறுத்தப்பட்டது, இதற்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற தாய் வழி சான்றிதழ் பெரும் மாணவர்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தடையானை இல்லாத காரணத்தினால் உயர் நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது தற்போதைய நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் குழப்ப நிலையில் உள்ளதைப் போல இரண்டு தரப்பு மாணவர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், தங்களது உரிமை பறிபோகிறது என்ற அடிப்படையில் பூர்வ குடி மாணவர்களும் தானும் பூர்வகுடி தான் என்ற அடிப்படையில் தாய் வழி சான்றிதழ் மாணவர்களும் அலைமோதுகின்றனர் NEET, CENTAC கவுன்சிலிங், அரசு பணி தேர்வுகள் என எதிலும் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்பு வரும் வரை ஒரு முழு கல்வி ஆண்டோ அல்லது தேர்வு சுழற்சியோ இவர்களுக்கு வீணாகும் நிலை உள்ளது. மேலும் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் மாறி மாறி வரும் நீதிமன்ற தீர்ப்புகளால் தங்களது கல்வி பாதிக்கும் அபாயத்தை எண்ணி வருந்தி வருகின்றனர் ஆனால் புதுச்சேரி அரசு இதற்கு ஒரு சமூக தீர்வை காண முற்படாமல் இரண்டு தரப்பு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து வருவதாக பார்க்கிறோம்
3. கோரிக்கை
இந்த இடைக்கால சிக்கலுக்கு தீர்வாக, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்பு வெளிவரும் வரை மட்டும் பின்வரும் தற்காலிக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய மக்கள் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்:
தாய் வழி சான்று வைத்துள்ள மாணவர்களுக்கு கல்வி சேர்கை மற்றும் அரசு பணி நியமனத்தில், ஏற்கனவே உள்ள சீட்டுகளை பாதிக்காமல், சூப்பர் நியூமரி அடிப்படையில் கூடுதல் இடங்கள் உருவாக்கி வழங்குதல்.
4. இந்த கோரிக்கைக்கான நியாயம்
- இது ஏற்கனவே பூர்வகுடி சான்று வைத்துள்ளவர்களின் உரிமையை எந்த வகையிலும் பாதிக்காது. நீதிமன்றங்களின் தீர்ப்பு எந்த நிலைபாட்டில் வந்தாலும் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்காது
- உச்சநீதிமன்ற இறுதி தீர்பு வரும் வரையிலான தற்காலிக ஏற்பாடு என்பதால் சட்ட சிக்கல் எழாது.
- இந்திய தொழில்நுட்ப கழகங்களில் பெண்கள் சேர்கை அதிகரிக்க சூப்பர் நியூமரி சீட் முறையை மத்திய அரசு 2018 முதல் வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. அதே போல் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும்போதும் சூப்பர் நியூமரி விரிவாக்கம் செய்யப்பட்டது.
எனவே, மாண்புமிகு அரசு இந்த தற்காலிக ஏற்பாட்டை உடனடியாக செயல்படுத்தி, தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் காக்குமாறு வேண்டுகிறோம்.
நன்றி
இவண்,
தில்லை.ஆறுமுகம்
செயலாளர்
தேசிய மக்கள் முன்னணி
www.dmmparty.com

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!