_கிருஷ்ணகிரி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, கிருஷ்ணகிரி பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு, இந்திய பல் மருத்துவர்கள் சங்க, கிருஷ்ணகிரி கிளை தலைவர் பிரபு தலைமை வகித்து, புகை பிடிப்பது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் நோய், உடல்நிலை பாதிப்பு குறித்து பேசினார். கிருஷ்ணகிரி பல் மருத்துவர் சங்க செயலாளர் நிவாஸ், டாக்டர்கள் ஆயிஷா பிரதோஷ், சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு பேரணியில், தனியார் நர்சிங் கல்லுாரி மாணவியர், 100க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகை ஏந்தி, புகையினால் உண்டாகும் நோய்கள் குறித்து, கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலை வழியாக பழைய வீட்டு வசதி வாரிய பகுதி, லண்டன் பேட்டை, வழியாக சென்று பேரணி, புனித பாத்திமா மேல்நிலைப்பள்ளி இணைப்பு சாலை பகுதியில் நிறைவடைந்தது.
பல் மருத்துவர்கள் சங்கத்தினர் புகையிலை எதிர்ப்பு பேரணி

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்