June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கே.ஆர்.பி., அணையில் 2வது நாளாக நீர்திறப்பு அதிகரிப்பு

_கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 27ம் தேதி நீர்வரத்து வினாடிக்கு, 484 கன அடியாக இருந்தது. தற்போது மாவட்டத்தில் மழையின்றி நீர்வரத்து நேற்று, 310 கன அடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளதால், அணையில் இருந்து நேற்று முன்தினம், 328 கன அடிநீர் திறந்த நிலையில் நேற்று, 433 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 50 அடியாக உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, 4வது நாளாக நேற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர் கவியரசு
9900557307