ஈரோட்டில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஏழைகளுக்கு உணவு வழங்கினார்…
ஈரோடு. மே. 29
உலக பட்டினி தனத்தை முன்னிட்டு முதல்வர் விஜய்யின் உத்தரவின் பெயரில் ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி ஏழைகளுக்கு உணவு வழங்கினார்.
மே மாதம் 28ஆம் தேதி உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தங்கள் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் உணவுகள் வழங்குவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்த உலக பட்டினி தனத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏழைகளுக்கு தரமான, ருசியான உணவு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏழை பொதுமக்களுக்கு தரமான அறுசுவை உணவுகளை வழங்கினர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் முதல்வர் ஜோசப் விஜயன் உத்தரவை ஏற்று அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு மரப்பாலம் பகுதியில் உள்ள சித்தி திடல் ஆயிஷா ரஷிமா சமுதாய கூடத்தில் இந்த சமபந்தி விருந்து நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அறுசுவையுடன் கூடிய மதிய உணவை நேற்று வழங்கினார்.
இதன் காரணமாக சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த பொதுமக்கள் முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக முன்னணி நிர்வாகி மீன் கடை ஹக்கீம், ஈரோடு மாநகராட்சி மன்ற உறுப்பினர் சபுராமா சாதிக் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!