June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் சிறப்பாக நடைபெற்ற ஈகைத் திருநாள் பெருவிழா…

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி ஆண்டவனை வழிபட்ட இஸ்லாமிய பெருமக்கள்…

ஈரோடு. மே. 29

ஈரோடு மாவட்டத்தில் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு செய்து, இறைவனை வழிபட்ட இஸ்லாமிய பெருமக்கள்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களின் பெரும் நம்பிக்கை பெருவிழாவாக, ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த பக்ரீத் திருநாளில் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் இஸ்லாமிய பெருமக்கள் இறைவனை வேண்டி தொழுகை என்று சொல்லப்படும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஈகை திருநாள் பெருவிழாவில், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி பசிப்போக்கும் ஒரு நாளாக இறைவனின் கட்டளையுடன் இஸ்லாமிய பெருமக்கள் ஆண்டுதோறும் ஆண்டவனை வழிபட்டு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை பள்ளிவாசல், அக்ரகாரம் பள்ளிவாசல், சங்கு நகர் பகுதி பள்ளிவாசல், கருங்கல்பாளையம் பள்ளிவாசல் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் இஸ்லாமிய பெருமக்கள் இறைவனிடம் வேண்டி தொழுகை செய்தனர்.

தொடர்ந்து அனைவருக்கும் அன்பு காட்டி பக்ரித் பெருநாளாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் பல்வேறு இடங்களில் உணவுகள் வழங்கியும், ஏழைகளுக்கு கறி வழங்கியும் தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களிலும், பள்ளிவாசல்கள் முன்பாகவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.