புதுச்சேரி:
கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நடத்தும் மூன்றாவது “புதுச்சேரி பிரீமியர் லீக்” (PPL T20 – 2026) கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று (16-05-2026) காலை 10:30 மணியளவில் துத்திப்பட்டில் உள்ள CAP மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பின்வரும் 6 அணிகள் தங்களது பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டு, வீரர்களைப் போட்டி போட்டு ஏலம் எடுத்தன:
வில்லியனூர் மோஹித் கிங்ஸ்
ஊசுடு அக்கோர்ட் வாரியர்ஸ்
காரைக்கால் நைட்ஸ்
மாஹே ஸ்ட்ரைக்கர்ஸ்
ரூபி வைட் டவுன் லெஜெண்ட்ஸ்
ஜெனிட் ஏனாம் ராயல்ஸ்
புதிய வீரர்கள்: இந்த ஏலத்தில் மொத்தம் 115 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு விளையாடிய வீரர்களில், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 10 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறைப்படி வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 20 வீரர்கள் வரை ஏலம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நிறுவனர் தாமோதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் புதுச்சேரி பிரீமியர் லீக் தலைவர் வித்யா மகேஷ், கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி கௌரவ செயலாளர் கார்த்திகேயன், கௌரவ துணைத் தலைவர் கணபதி, தலைமை செயல் அதிகாரி மயங் மேத்தா மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மூன்றாவது புதுச்சேரி பிரீமியர் லீக் (PPL) போட்டிகள் வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!