புதுச்சேரியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முடக்கும் எதிர்க்கட்சிகளை கண்டித்து புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்!
புதுச்சேரி :
நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறவிடாமல் தடுத்த காங்கிரஸ், திமுக, திருணமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய எதிர்க்கட்சிகளின் செயல்களைக் கண்டித்து, புதுச்சேரி மாநில பாஜக மகளிர் அணி சார்பில் உழவர்கரை மாவட்டத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிரியதர்ஷினி நகரில் உள்ள ஜே.சி.ஆர் (JCR) மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கண்டன பொதுக்கூட்டம் மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வனிதா சேது ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர் ஜெயலட்சுமி, மாநில செயலாளர் மற்றும் உழவர்கரை மாவட்ட பொறுப்பாளர் தமிழ்மாறன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்து, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் பிரியா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைவாணி, மாநில மகளிர் அணி செயலாளர்கள் ரமணி, சுஜாதா, உழவர்கரை மாவட்ட துணைத் தலைவர் அன்புதுரை, ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், சத்தியமூர்த்தி, கணபதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனாட்சி, தனலட்சுமி, மாவட்ட ஓபிசி அணியின் தலைவர் வரதராசன், துணைத் தலைவர் பரணி, இந்திரா நகர் தொகுதி தலைவர் அருள் வேந்தன், தொகுதி பொதுச் செயலாளர் சண்முக குமார், தொகுதி துணைத் தலைவர் அசோக்குமார், தொகுதி பொருளாளர் ரவி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நரசிம்மன், முத்து, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் முடிவில் முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து, மகளிர் முன்னேற்றத்திற்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் போக்கினை விமர்சித்தனர்.
இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!