June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் சில்லிங் விற்பனையாளர்கள் ஓட்டம்.

மணப்பாறை, ஏப். 22–

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மூன்று நாட்கள் மதுபான கடைகள் விடுமுறை என்பதால் போலீசார் அவ்வப்போது சோதனை இட்டு வந்தனர் இந்த நிலையில் மணப்பாறை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களின் தனிப்படை போலீசார் மணப்பாறை நொச்சி மேடு மற்றும் பொன் முச்சந்தி ஆகிய முக்கிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பொழுது செட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த சிவபாலகுமாரன், சாம்பட்டி துரைக்கண்ணு, கள்ளுக்காட்டுப்பட்டி சின்னசாமி, மூன்று நபர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி மூன்று நபர்களையும் சிறையில் அடைத்தனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் அதிரடியால் மணப்பாறை பகுதி முழுவதும் சில்லி விற்பனையாளர்கள் தலைமறைவாகி வந்தனர்.