வந்தவாசி, ஏப் 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்ட பகிர்ந்துண் எனும் இலவச உணவகம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தினமும் 100 ஆதரவற்ற மற்றும் பொதுமக்களுக்கும் மதிய உணவை விலையின்றி வழங்கி வருகின்றனர்.
இதனையடுத்து நேற்றுடன் இந்த உணவு வழங்கும் திட்டம் 700 வது நாளை கடந்து பொதுமக்களின் பசியாற்றி வருவதை கொண்டாடும் வகையில் சிறப்பு அன்னதானம் வழங்கினர். நிகழ்விற்கு அறக்கட்டளை நிறுவனர் அசாருதீன் தலைமை தாங்கினார்.
கௌரவ தலைவர் அமானுல்லா உணவு வழங்கி துவக்கி வைத்தார்.
உடன் செயலாளர் சுகி சிவம், துணை தலைவர் வசீகரன், அருண் பிரபு, செந்தமிழ், பிரசாத்,ராஜேஷ், யமுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவினை வழங்கினர்.

More Stories
சேலம்,06/04/2026.
Election
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அறம் சார்பாக “சூப்பர் ஓவர் – சீசன் 2” கிரிக்கெட் போட்டி