வந்தவாசி, மார்ச் 29:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை ம.சசிகலா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் பார்த்திபன், திருவேங்கட லட்சுமி மற்றும் வட்டார வள மைய கணக்காளர் மற்றும் வந்தை முன்னேற்ற சங்கம், சிற்பி தொண்டு நிறுவனம், ரோட்டரி கிளப், எக்ஸ்னோரா கிளப், கற்க கசடற அமைப்பு மற்றும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க நிர்வாகிகள், ஒன்றிய அளவிலான இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நூலக பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நூலக புத்தகங்களும் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியை ம.மகேஸ்வரி நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்