உழவர்கரை தொகுதியில் முனைவர் மு. லாவண்யா அவர்களின் சூறாவளிப் பிரச்சாரம்: மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
புதுச்சேரி | மார்ச் 26
புதுச்சேரியில் வரும் ஒன்பதாம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி உழவர்கரைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அஜீஸ் நகர் மற்றும் மூகாம்பிகை நகரில் உற்சாக வரவேற்பு
உழவர்கரை தொகுதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கை நட்சத்திரமும், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சின்னம்மாவின் (புரட்சித்தாய்) ஆசி பெற்ற வேட்பாளருமான சமூக சேவகி முனைவர் மு. லாவண்யா அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொகுதிக்குட்பட்ட அஜீஸ் நகர் மற்றும் மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் தொகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அமோக வரவேற்பு அளித்தனர்.
”எட்டு ஆண்டு கால சேவை – ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்”
வாக்கு சேகரிப்பின் போது மக்களிடையே பேசிய முனைவர் மு. லாவண்யா அவர்கள் உருக்கமாகக் குறிப்பிட்டதாவது:
”கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ஒரு சாதாரணச் சமூகப் பணியாளராக உங்களோடு நான் பயணித்து வருகிறேன். அதிகாரத்தில் இல்லாத போதும் உங்கள் கஷ்டங்களை உணர்ந்து, என்னால் முடிந்த அனைத்து மக்கள் பணிகளையும், உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன்.
இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். உங்கள் ஆதரவோடு நான் வெற்றி பெற்றால், கண்டிப்பக இந்த உழவர்கரைத் தொகுதியை புதுவையின் முதல் மாதிரித் தொகுதியாக (Model Constituency) மாற்றிக் காட்டுவேன்!”
அதிகரிக்கும் ஆதரவு
ஒவ்வொரு வீடாகச் சென்று பெரியவர்களிடம் ஆசி பெற்றும், இளைஞர்களிடம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசியும் வாக்கு சேகரித்த அவருக்கு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு பெருகி வருகிறது.
தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் முனைவர் மு. லாவண்யா அவர்களின் இந்தத் தீவிரப் பிரச்சாரம், உழவர்கரை தொகுதி தேர்தல் களத்தில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election