புதுச்சேரி:
புதுச்சேரி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் ’10 ரூபாய் சட்ட இயக்கத்தின்’ நிறுவனர் ரகு, இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை ரகு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார். மனுத் தாக்கலை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகு கூறியதாவது:
”அரியாங்குப்பம் தொகுதி மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பேன். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து விதமான மக்கள் நலத்திட்டங்களையும் தொகுதிக்குக் கொண்டு வருவேன்.”
மேலும், அரியாங்குப்பம் தொகுதி மக்கள் தனக்கு முழுமையான ஆதரவை வழங்கி, ஒரு மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்