புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் சுதந்திர போராட்ட தியாகி தெய்வநாயக கவுண்டர். இவரிடம் அரசு 1969ம் ஆண்டு அரசு பள்ளி கட்டுவதற்காக இடம் கேட்டு அணுகியது. புதுச்சேரி வழுதாவூர் பிரதான சாலையில் உள்ள இடத்தை தர தியாகி செய்வநாயக கவுண்டர் தயங்கினாலும் அப்போதைய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் அரசு அந்த இடத்தை கையகப்படுத்திக் கொண்டது. அந்த இடத்துக்கு பதிலாக தியாகி தெய்வநாயகம் அவர்களுக்கு அரசு சார்பில் ரூ.669.30 பைசா இழப்பீடு மற்றும் மாற்று இடம் கொடுத்து அரசு வழங்கியது.
தற்போது தியாகி தெய்வநாயக கவுண்டர் கொடுத்த இடத்தில் மேட்டுப்பாளையம் அரசு பள்ளி இயங்கியும் வருகிறது. ஆனாலும் அந்த இடத்திற்கான பட்டா இன்றும் அவரது பெயரிலேயே உள்ளது. மேலும் அவருக்கு ஒதுக்கிய பணத்தையும் அவர் எடுக்காமலேயே மறைந்தும் விட்டார்.
அதேசமயம் அவருக்கு சர்வே எண் 105/2ல் 5 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தையும் முறையாக அவரிடமோ, அவரது வாரிசிடமோ அரசாங்கம் இதுவரை ஒப்படைக்கவும் இல்லை. விடுதலைப் போராட்ட தியாகி தெய்வநாயகத்தின் இடத்தை கண்டுபிடித்து அவரின் வாரிசுகள் இடம் ஒப்படைக்க வேண்டும் என இன்று தேசிய மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
அரசு கையகப்படுத்திய விடுதலைப் போராட்ட தியாகி தெய்வநாயகத்தின் இடத்தை கண்டுபிடித்து அவரின் வாரிசுகள் இடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election