ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்..
ஈரோடு. மார்ச். 15
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அமைச்சர் முத்துசாமி புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தும் பொது மக்களுக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கி சிறப்பித்தார்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட ரங்கம்பாளையம் மற்றும் கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் பொது விநியோக த் திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதோடு புதிய நியாய விலைக் கடை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் சு. முத்துசாமி புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தும், ஈரோடு வட்டாட் சியர் அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விலையில்லா வீட்டு மனை பட்டா 27 நபர்களுக்கும் அமைச்சர் முத்துசாமி வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ வி. சி சந்திரகுமார் மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர் இபி ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election