கோவை மார்ச்:13
கோவை மாவட்டம் காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் காரமடை ரோட்டரி சங்கம்,திருப்பூர் ஐ.எம்.ஏ.பிளட் பேங்க்,கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்,இண்ட்ராக்ட் கிளப் ஆகியவை இணைந்து இரத்ததானம் வழங்கும் முகாமை நடத்தினார்கள்.இம்முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.அம்மாணவர்களை ரோட்டரி சங்க தலைவரும்,கல்லூரி முதல்வரும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.அதில்”ரத்த தானம் செய்வதால் இதன் மூலம் பிற உயிர்கள் அடையும் பயன்களையும்,இரத்தம் வழங்குவோருக்கு உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார்,செந்தில் குமார்,தினகரன்,சுதா,இயேசு மணி,கல்லூரி நிர்வாகிகள் அருட்தந்தை S.சேவியர்,முதல்வர் ராபின்சன்,துணை முதல்வர் லோகேஷ்,ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் இருந்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!