கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி, முன்னாள் தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறியதாவது: நான் கிருஷ்ணகிரி நகராட்சியில், ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளேன். கடந்த பிப்., 9ல் கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் நடந்தது. இதில், இடம்பெற்ற, 78 தீர்மானங்களில், பல பணிகள் இருமுறை குறிப்பிடப்பட்ருந்தது. ஒரே பணிக்கு வெவ்வேறு தொகைகள், ஒரு பொருளை ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி, மாறி குறிப்பிட்டுள்ளனர். மொத்தம், 2.04 கோடி ரூபாய் நகராட்சி பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குனர், நகராட்சி கமிஷனர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் சேகர் கூறியதாவது: முன்னாள் நகராட்சி தலைவர் கொடுத்த புகார் மனு தொடர்பாக விசாரித்து வருகிறேன். அன்றைய கூட்டத்தில் இருமுறை பதிவு அன்றே நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்ற புகார்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்