வந்தவாசி, மார்ச் 10:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கௌரவ தலைவர் ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் வி. விஜயகுமார், செயலாளர் எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எ.இராஜசேகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு கருணீகர் சங்க நிர்வாகி ஸ்ரீதேவி துரை அரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சம்பத் குமார், கிளை பொறுப்பாளர்கள் மோகன் குமார், சீதாலட்சுமி, பாரதி, கஸ்தூரி உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க நிர்வாகி இரா.அருள்ஜோதி நன்றி கூறினார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!