சேலம்,ஓமலூர் தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ-வான தமிழரசு,தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு பாமக எம்எல்ஏ-வாக இருந்த தமிழரசு அக்கட்சியிலிருந்து இருந்து விலகி திமுக-வில் இணைந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் தமிழரசு கூறியதாவது: பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் 40 ஆண்டு காலம் பயணித்தேன்.
2014-ல் பாமக-வில் இருந்து வெளியேறினேன். 2019-ல் அழைப்பின் பேரில் ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைந்தேன். அப்போது, எங்களை ஆதரிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் சொன்னார் ஸ்டாலின். ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் எங்களுக்கு திமுக-வில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் பிரிவினையை ஏற்படுத்துகிறார். எனவே, மனமுவந்து, அதிமுக-வில் இணைந்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!