பத்திரிகை செய்தி
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, ஜி.என்.பாளையம் கிராம மக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு, மின்துறை மூலம் ரூ. 24 லட்சம் செலவில் 200 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி வெண்ணிசாமி நகரில் அமைக்கப்பட்டு, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, கூடுதல் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மின்துறை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவிப் பொறியாளர் சந்திரசேகர், இளநிலைப் பொறியாளர் ஸ்டாலின், ஊழியர்கள் குமரேசன், கோபால், வேலவன், கார்த்திகேயன், சமுதாயராஜன், மகேஷ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஏழுமலை, துளசிதாசன், முருகையன், முத்துக்குமரன், செழியன், கலைவாணன், சீனுவாசன், கார்த்திகேயன், ராஜாராம், பரணி, வெங்கடேசன், சிவராமன், முருகன், ராமமூர்த்தி, திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், துணை அமைப்பாளர் சரவணன், பொருளாளர் கந்தசாமி, கிளைக் கழக நிர்வாகிகள் கமல்பாஷா, பாலா, முருகன், மாணவர் அணி கோபி, மோகன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election