April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் திரு. சு. செல்வகணபதி எம்.பி., பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார்!

புதுச்சேரி | 08.03.2026:

மாநிலங்களவை உறுப்பினர் சு. செல்வகணபதி பரிந்துரையின் பேரில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் முதியோர், விதவை மற்றும் ஆதரவற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதியோர், விதவை மற்றும் ஆதரவற்றோர் பலர் தங்களுக்கு அரசு உதவித்தொகை பெற்றுத் தருமாறு மாநிலங்களவை உறுப்பினர் சு. செல்வகணபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 32 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கும் விழா இன்று காலை 12.00 மணியளவில் நடைபெற்றது. சு. செல்வகணபதி தனது அலுவலகத்தில் வைத்து இந்த ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனர், அதிகாரிகள், பாரதிய ஜனதா கட்சி லாஸ்பேட்டை தொகுதி தலைவர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp