புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பாக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக இடம் பெறச் செய்வதற்காக, மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் “உங்கள் விருப்பம் எங்கள் வாக்குறுதி” எனும் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக அனைத்து சமுதாய மக்களையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்று (05.03.2026- வெள்ளிக்கிழமை), விஸ்வகர்மா சமுதாய மக்களிடம் உங்கள் விருப்பம் எங்கள் வாக்குறுதி எனும் கருத்து கேட்பு நிகழ்ச்சி, புதுச்சேரி உள்ள தனியார் ஹோட்டலில்
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.V.P.ராமலிங்கம் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு சபாநாயகர் திரு . ஏம்பலம் செல்வம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், விவசாய அணி அணி மாநில தலைவர் திரு. பாரதிமோகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பட்டியல் அணி மாநில தலைவர் திரு. காத்தவராயன் அவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் நலத் திட்டங்களை வீடியோ காட்சி வாயிலாக விளக்கினார்.
இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் திரு.கோவேந்தன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இறுதியில் பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் திரு.ரமேஷ் பாஷ்யம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
மேலும் நிகழ்ச்சியில்,
பட்டியல் அணி மாநில செயலாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள்,
விவசாய அணி மாநில துணைத்தலைவர் திரு. முத்து அவர்கள்,
விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.விக்னேஷ் அவர்கள்,
திரு கலையரசன் அவர்கள், திரு. மணிகண்டன் அவர்கள் , திரு.இதயமணி அவர்கள்,
திரு . குப்பன் அவர்கள்,
திருமதி லட்சுமி அவர்கள், திருமதி.வள்ளி அவர்கள், திருமதி.அகிலாண்டேஸ்வரி அவர்கள்
உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election