April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இயற்கை உயிராற்றல் (பயோ-டைனமிக்) வேளாண்மை பயிற்சி நிறைவு விழா

மணப்பாறை மார்ச் 4

அகிம்சா தொண்டு நிறுவனம், இன்ப சேவா சங்கம்- கடவூர், இயற்கை உயிராற்றல் வேளாண் பள்ளி, மற்றும் இந்திய இயற்கை உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு ( BDAI) இணைந்து இயற்கை உயிராற்றல் (பயோ-டைனமிக்) வேளாண்மை பயிற்சி மூன்று நாட்கள் நடத்தப் பட்டது,
இப்பயிற்சி கூட்டம், இயற்கை உயிராற்றல் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய இயற்கை உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு ஜெய்சன் ஜெரோம், அன்பு, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியின் நிறைவு நாளில், நபார்டு வங்கி- கரூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு, ஊக்கமளிக்கும் நிறைவு உரையை வழங்கினார். விவசாயிகள் இயற்கை விவசாயத்தை கற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாமல், அதனை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மார்கண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இன்ப சேவா சங்கத்தின் செயலாளரும், இந்திய இயற்கை உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு பொருளாளருமான முனைவர். பெருமாள் அனைவரையும் வரவேற்றார்
பயோ-டைனமிக் விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் நம் பாரம்பரிய பருத்தி (சுரக்ஷா & கருங்கண்ணி கே12), விவசாய சாகுபடிகளை முன்னிருத்துவதற்கான முயற்சிகளை கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ள இருப்பது குறித்தும் விளக்கினார்.
அகிம்சா தொண்டு நிறுவன இயக்குநர் விக்டர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
அகிம்சா பணியாளர்கள், இன்ப சேவா சங்க நிர்வாகச் செயலாளர் ரேவதி ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து இயற்கை விவசாயிகளுக்கும், பயிற்சி நிறைவின் அடையாளமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி மூலம் பெற்ற அறிவும் அனுபவமும், விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும் என பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp