April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணல் கடத்திய லாரி பறிமுதல் மூன்று பேர் கைது, துணைக் கண்காணிப்பாளர் அதிரடி.

மணப்பாறை ஏப்ரல் 3

திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மண்ணள்ளும் கும்பல் தங்கள் கைவரிசையை இரவு மற்றும் பகல் நேரங்களில் மணல் கடத்தி வந்த நிலையில் மணப்பாறை துணை கோட்ட கண்காணிப்பாளர் காவியா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம், மறவனூர் பகுதியில் மண் கடத்துவதாக போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது வரகுபட்டி ராமராசு வயது 33 வெள்ளனூர் அகில் ராஜ் வயது 53 வடிவேலு வயது 24 என தெரிய வந்தது மூன்று நபர்களிடமிருந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி மூவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர், இதனால் வையம்பட்டி மற்றும் மணப்பாறை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மண் மற்றும் மணல் அள்ளும் கும்பல் ஓட்டம் எடுத்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp