ஈரோடு திண்டல் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல்..
ஈரோடு. மார்ச். 01
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திமுகவினர் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அவர்களின் பிறந்தநாள் இன்று மார்ச்1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகள், நகராட்சி பகுதிகள், மற்றும் ஒன்றியம் நகரம் பேரூர் கிளை கழகம் என அனைத்து பகுதிகளிலும் நல திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், முதல் நல திட்ட வழங்கும் விழாவாக, திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், அங்கு படிக்கக்கூடிய ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் சு. முத்துசாமி கல்வி உபகரண உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம், வில்லரசம்பட்டி பகுதி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!