45 கி.மீ – சேலம் ரிங் ரோடு – கமலாபுரம் ஏர்போர்ட் டூ மல்லூர்.
டிராபிக் இல்லாத பைபாஸ் ரூட்.
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரிங் ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது கமலாபுரம் விமான நிலையப் பகுதியில் இருந்து புறப்படும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் மிக வேகமான தொழில் வளர்ச்சியை சேலம் அடைந்து வருகிறது. இதையொட்டி உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சேலத்தில் மக்கள் நெருக்கடியால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. உதாரணமாக 4 ரோடு, 5 ரோடு, சீலிநாயக்கன்பட்டி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சேலத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களுக்கு நுழைவு வாயில் போன்று காணப்படுகிறது.சேலம் வழியாக பெங்களூரு பயணம்குறிப்பாக ஓசூர், பெங்களூருவில் தொழில் வாய்ப்புகளை தேடி பலரும் அங்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் தனி நபர் வாகனங்களில் வரும் போது சேலம் வழியாக தான் செல்ல வேண்டியிருக்கிறது. சரக்கு வாகனப் போக்குவரத்திலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. மேற்கு மண்டலம் மட்டுமின்றி, தெற்கில் இருந்து வரும் ஏற்றுமதி வாகனங்கள் சேலம் வழியாக தான் வட இந்திய மாநிலங்களுக்கு புறப்பட்டு செல்கிறது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை பார்க்க முடிகிறது.
சேலம் ரிங் ரோடு – பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதற்கு தீர்வு காணும் வகையில் ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாகவே சேலம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர். தமிழக அரசு தரப்பின் பதில் என்பது, சேலம் ரிங் ரோடு திட்டம் தொடர்பாக ஆய்வறிக்கை தயாரிக்க முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கமலாபுரம் ஏர்போர்ட் – மல்லூர் முதல்கட்ட திட்டம்
அதுசரி, சேலம் ரிங் ரோடு திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகின்றனர் என்று சில தகவல்கள் வைரலாகி வருகின்றன. அதாவது, கமலாபுரம் விமான நிலையப் பகுதியில் இருந்து புறப்பட்டு தாரமங்கலம், இளம்பிள்ளை, நடுவனேரி, காக்காபாளையம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் வழியாக மல்லூர் வரை 45 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சவால் நிறைந்த மல்லூர் – மின்னாம்பள்ளி ரிங் ரோடு
இரண்டாவது கட்டமாக மல்லூர் – மின்னாம்பள்ளி, மூன்றாவது கட்டமாக மின்னாம்பள்ளி – கமலாபுரம் வரை சென்று ஒரு வளையம் போன்று புதிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த மூன்று கட்ட திட்டங்களில் மிகவும் சவாலாக இருப்பது இரண்டாவது கட்டம் தான் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் மல்லூர் – மின்னாம்பள்ளி இடையில் மலைகள் இருப்பதால், அவற்றை வெட்டி எடுத்து ரிங் ரோடு சாலை அமைப்பது சிரமம். இதற்காக சாத்தியக்கூறுகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மக்கள் கோரிக்கை – 2026 தேர்தல் வாக்குறுதியா?
சேலம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கும் ரிங் ரோடு திட்டத்தை தங்களின் தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் சேர்க்க வேண்டும் என்றும், மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் முதல்கட்ட குட் நியூஸ் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!