February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மசூதி தெருவில் கடந்த 8 மாதங்களாக மினி சின்டெக் டேங்க் செயல்படாததால், அப்பகுதி பொதுமக்கள் கடும் குடிநீர் கட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.
சுமார் 8 மாதங்களுக்கு மேலாக இந்தத் தண்ணீர் மோட்டர் பழுதடைந்து நிலையில் உள்ளது. இது குறித்துப் பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது புனித ரம்ஜான் மாதம் என்பதால், நோன்பு இருக்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தண்ணீரின் தேவை மிக அத்தியாவசியமாக உள்ளது. ஆனால், ஒரு குடம் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவல நிலை நீடிப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள்
அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, இன்று பொதுமக்கள் திரளாகச் சென்று மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், “நாளைக்குள் பழுதுகளைச் சரிசெய்து தண்ணீர் விநியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தனர்.
அதிகாரிகளின் இந்த வாக்குறுதியை ஏற்றுப் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், “நாளைக்குள் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படாவிட்டால், ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp