கோவை -பிப்:28
கோவை போத்தனூர் ரயில்வே அரங்கில் கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் 49வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவிற்கு வந்த தமிழ் அறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் பேரவையின் நிர்வாகிகளையும் பேரவையின் தலைவர்பாவலர். இரா.தம்பிதுரை வரவேற்றார்.
பாவேந்தர் பாரதிதாசன் பேரவையின் 49வதுஆண்டு விழாவுக்குமுத்து எஞ்சினியரிங் நிர்வாக இயக்குநர் அரிமா முத்து.டாக்டர்.ஆர் பழனிசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவிஞர் பொன் சிங் அவர்களின் உண்மை உறங்கும் நேரம் உறவும் பிரிவும் உள்ளத்தின் கதவுகள் ஆகிய 25 புத்தகங்களை பாவேந்தர் பாரதி தாசன்பேரவைக்கு நன்கொடையாக வழங்கினார்.தமிழ் இலக்கியவட்டத்தில் உள்ள படைப்பாளிகள் கவிஞர்கள் எழுத்தாளர்களை அரவணைத்து தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு வரும் வள்ளல் அரிமா முத்து.டாக்டர்.ஆர். பழனிசாமி அவர்களுக்கு கவிஞர் பொன் சிங்காரம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.செயல் தலைவர் பொறியாளர் கருணாநிதி நன்றி உரையாற்றினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!