புதுச்சேரி | 25.02.2026
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட முத்துலிங்கப்பேட்டை பகுதியில், நமது மக்கள் கழகம் (NMK) மற்றும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல் சிகிச்சை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
நமது மக்கள் கழகத் தலைவரும், உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்களின் நல்லாசியோடு இந்த முகாம் நடைபெற்றது. NMK பொதுச் செயலாளரும் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளருமான E.விநாயகம் MA அவர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
9:00 மணியளவில் தொடங்கிய இந்த முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் G.நேரு (எ) குப்புசாமி அவர்கள் நேரில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று, பல் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் தொழிலதிபர் N.ரஞ்சித்குமார் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி NMK பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
”எங்கள் பகுதியில் இதுவரை இதுபோன்ற பிரத்யேக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில்லை. எங்களின் தேவையறிந்து இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த திரு. E.விநாயகம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என இப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மதியம் 1:00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளையும், வாய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் வழங்கினர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!