மாற்றுத்திறனாளி வீரர்கள் விமான மூலம் பயணம்..
தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் சிறப்பான ஏற்பாடு.
ஈரோடு. பிப். 26
உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் தேசிய பாராளி ஒலிம்பிக் வாலிபால் போட்டிகளில் கலந்து கொள்ள ஈரோட்டில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் விமான மூலம் பயணம் செய்து போட்டிகளில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாராவாலி அசோசியேசன் மற்றும் ஈரோடு மாவட்ட பாராவாலி அசோசியேசன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான, வாலிபால் தேசிய அளவிலான போட்டியில் அவர்கள் கலந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான இறுதி தேர்வு போட்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை, ஈங்கூர் பகுதியில் செயல்படும் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் இம்மாதம் பிப்ரவரி 25ஆம் தேதி, உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் போட்டிக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் கோவை விமான நிலையத்திலிருந்து, திருநாள் வீரர்கள் விமான மூலம் டெல்லி அனைத்து செல்லப்பட்டு அங்கிருந்து விமான மூலம் போட்டி நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் தலைமையில் இந்த வீரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான பாராவளி ஒலிம்பிக் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மொடக்குறிச்சி அதிமுக முன்னாள் எம் எல் ஏ வி பி சிவசுப்பிரமணியம் விளையாட்டுப் போட்டிக்கான உடைகளை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..