கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் சந்தாபுரம் பிரசாந்த் (27) என்பவா் தரப்பிற்கும் திமுக காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் மகன் ckm.ஆகாஷ் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ckm.ஆகாஷ் அருவா, கத்தியுடன் பிரசாந்த் தரப்பை சோ்ந்தவரை வெட்டியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சி கெ எம் .ஆகாஷ் (23), சாண்டி (21), வெங்கடேஷ் (29) ஆகிய மூவரை கைது செய்தனா். மேலும் பலரை தேடி வந்தனா். இந்த நிலையில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த ராமு (22), அப்துல்கலாம் (22), சபரி (22), உமா் பாரூக் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதனை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில்
ஜாமின்னில் வெளிவராத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மீது காவல் துறை அதிகாரிகள் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு 9900557307

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.