February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாநகராட்சி முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சங்கங்கள் சார்பில் நடைபெற்றது..

ஈரோடு. பிப். 15

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி. எம் வெங்கடசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமரவேல், ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், தமிழ்நாடு மாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர். பிரேம் குமார் உள்ளிட்ட கூட்டு நடவடிக்கை குழு சங்க நிர்வாகிகள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp