அய்யலூரில்
விலை கிடைக்காததால் தக்காளியை குப்பையில் வீசிய விவசாயிகள்
பதப்படுத்தும் தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தல்
திண்டுக்கல், பிப்.15-
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர், அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், கோவிலூர், கல்பட்டி சத்திரம் மற்றும் வையம்பட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நாட்டுத்தக்காளி மற்றும் ஹைபிரிட் வகைகளை பயிரிட்டு உள்ளனர். அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி சந்தை உள்ளது. இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்ததால் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. தரமான தக்காளி கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கேட்கப்படு கிறது. தக்காளி பயிரிட்ட செலவுக்கு கூட பணம்
கிடைக்காததால் வேதனை அடைந்த விவசாயிகள் சாலையோரம் குப்பைகளில் வீசிச்செல்லும் அவலநிலை உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பதால் அவர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
தங்கம்மாபட்டியில் தொடங்கப்பட்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். தக்காளியை பதப்படுத்தி சாஸ் தயாரிக்கப்படும் வகையில் நிறுவனத்தை தொடங்க வேண்டும். தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..