கோவை: பிப் -11
71 வருட மணி பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் மணி பள்ளி முன்னாள் மாணவர்கள் அசோசியேஷன் துவங்கப்பட்டுள்ளது.
மணிப்பள்ளி 1954 ஆம் வருடம் துவங்கி இன்று வரை 71 வருட மாணவர்களை பல்வேறு உச்ச நிலைக்கு தகுதிப்படுத்தி உள்ளது.
இந்த 71 வருட மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக முன்னாள் மாணவர்கள் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் பேசுகையில், மணி பள்ளியானது சுமார் 10,000 மேற்பட்ட மருத்துவர்கள்,அரசு அலுவலர்கள், தனியார் துறை உச்ச நிலை அதிகாரிகள், தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு நிலைக்கு மாணவர்களை உயர்த்தியுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக மிக விரைவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பை முன்னாள் மாணவர்கள் அமைப்பு திறம்பட செய்ய உள்ளது என்றார்கள். மேலும் பேசுகையில், இந்த முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மூலம் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி, விளையாட்டில் ஆர்வம் இருந்து வசதி இல்லாமல் இருக்கும் மாணவர்களை ஊக்குவித்தல், உயர்கல்வி படிக்க உதவுதல்,அரசு தேர்வுக்கு தகுதியாக பயிற்சி அளித்தல், உயர்கல்விக்கு வழிகாட்டுதல் என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் இத்தகைய முயற்சிக்கு அனைத்து முன்னாள் மாணவர்களும் முன்வந்து நமது பள்ளியை பெருமை அடைய செய்வோம் என்றார்கள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்