புதுச்சேரி:
புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள குளோபல்ஆர்ட் (Globalart) ஓவியப் பள்ளியில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து – கிருஷ்ணவேணி இணையர் குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
பொறிஞர் மு. சுரேஷ்குமார்
சு. ரம்யா (நிர்வாக இயக்குநர்)
சீனு. மோகன்தாசு (புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர்)
பொறிஞர் மு. பாலசுப்ரமணியன்
தெ. தினகரன் (துணைச் செயலர்)
தி. பாரதி, கலைமாமணி எம்.எஸ். இராஜா
கவிஞர் இர. ஆனந்தராசன், அ. சிவேந்திரன்
தூர்தர்ஷன் விஜயன், சேகர் (பஞ்சாப் நேஷனல் வங்கி)
இந்தக் கண்காட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரைந்த விதவிதமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்களின் கற்பனைத் திறனையும், கலை ஆர்வத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த ஓவியங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் பார்வையிட்டுப் பாராட்டினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்