June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

*மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒன்றிணைத்து ஆட்சியரிடம் மனு!!

திருப்பூர் :பிப்- 02,

அரசாங்க இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க வேண்டுமென புகாரளித்திருந்த மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரை வீடு புகுந்து மிரட்டியவர்கள் மீது FIR பதிந்து கைது செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாரந்திர கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் அவர்களிடம் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

இதில் தலைவர் நல்லூர் N.சண்முக சுந்தரம் , செயலாளர், ஈ.பி.அ.சரவணன், பொருளாளர் A. ஹாஜி லியாகத் அலி , இணை செயலாளர் , C.R.சிந்து சுப்பிரமணியம், துணைத்தலைவர்கள், KAK.P.கிருஷ்ணசாமி, K.V.S. மணிக்குமார், துணை செயலாளர் K.ரவி, செய‌ற்குழு உறுப்பினர்கள். R.ஜான் சாமுவேல், B.ஹரிகரன் .K.ராமர், S.காதர் பாட்சா, கோவிந்த ராஜ்,BA.BL , வஞ்சிபாளையம் துரை, ஈஸ்வரன், பத்து ரூபாய் இயக்க மாவட்ட செயலாளர் செல்லம், ஜானகிராமன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வலியுறுத்தினர்.

இது தொட‌ர்பாக அளித்துள்ள மனுவில்….

              திருப்பூர் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரும் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவருமான ஈ.பி.அ.சரவணன் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள நெருபெரிச்சல் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள  திருமண மண்டபத்தை மீட்டெடுத்து அரசாங்க இடத்தை பாதுகாக்க வேண்டுமென புகார் மனுகள் கொடுத்ததன் காரணமாக அந்த மண்டபத்தின் அறக்கட்டளையைச் சார்ந்த சிலர் திருப்பூர் வடக்கு மாநகரம் போயம்பாளையம் பழனிச்சாமிநகரி

லுள்ள ஈ.பி.அ.சரவணன் வீடு தேடிச் சென்று வீட்டில் உள்ளே புகுந்து மேற்கூறிய பிரச்சனையை கைவிட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஈ.பி.அ.சரவணன் இது குறித்து காவல்துறையிடம் பல்வேறு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுத்ததுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளை ஈ.பி.அ.சரவணன் நேரில் சந்தித்து புகாரளித்த பிறகும்கூட எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லை குறிப்பாக மேற்படி அத்துமீறி ஈ.பி.அ.சரவணனின் வீட்டில் புகுந்து புகாரை திரும்ப பெற கூறி மிரட்டிய 4நபர்கள் மீது வழக்கு பதிய கூறினால் ஈ.பி.அ.சரவணன் மீ்து தொடர்ச்சியாக பொய் வழக்கு போடப்படும் என அச்சுறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல்துறையும் மேற்படி ஈ.பி.அ.சரவணனினில் வீட்டில் புகுந்து புகாரை திரும்ப பெற கூறிய நபர்கள் மீது சட்டரீதியாக FIR வழக்கு பதிந்து மேற்படி 4 நபர்கள் நடவடிக்கை எடுத்து சமூகத்தில் பொது பணிகளை செய்து வருகின்ற ஈ.பி.அ.சரவணனின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவரது வீட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட அனைத்து நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.