அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”;; மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் இன்று (02.02.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 453 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 01 மாற்றுத்திறன் நபருக்கு ஊன்றுகோலும், 01 மாற்றுத்திறன் நபருக்கு கைக்கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து ரூ.10000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் பெற்ற பாலமுருகன் மற்றும் மூன்றாம் பிடித்து ரூ.5000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கிருஷ்ணவேனி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!