June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​டோல்கேட் கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு: சபாநாயகர் ஆர்.செல்வம் அடிக்கல் நாட்டினார்!

​புதுச்சேரி:

புதுச்சேரி யூனியன் பிரதேசம், அரியாங்குப்பம் கொம்யூன், மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டோல்கேட் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று (02.02.2026) நடைபெற்றது.

​டோல்கேட் கிராமத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவில் அருகில் உள்ள அரசு நிலம்.
​பொதுப்பணித்துறை மூலம் சுமார் ₹24.00 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
​இந்த புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதன் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

​புதுச்சேரி முதலமைச்சர் திரு. N.ரங்கசாமி அவர்களின் தலைமையில், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. K.லட்சுமிநாராயணன் அவர்களின் முன்னிலையில், மணவெளி சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான திரு. R.செல்வம் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.

​இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. K.வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் திரு. R.சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் திரு. S.பக்தவச்சலம், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஊர் பொதுமக்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.