July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் இரகு. அன்புமணி தலைமையில்இன்று 30 1 2026 காலை 11 மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ( பால்பண்ணை ) முன்பு 200க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது 1. ஒன்பது மாத காலமாக போடாத தீவனம் மானியத்தை உடனடியாக வழங்கி விடு 2. மாநிலம் முழுவதும் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட கறவை மாட்டில் ஊழல் நடைபெற்றது ஒட்டி பிடிக்காத மாடுகள் நேர்மையான முறையில் பால் உற்பத்தியாளர்களின் ஒப்புதலோடு மாடுபிடிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும்

  1. ஆறு ஆண்டு காலமாக வாழ்வு உயர்வு என்பது இல்லை தீவனம் புண்ணாக்கு பருத்திக்கொட்டை விலை ஏற்றம் இருந்தும் பால் விலை உயர்வை அறிவிக்காததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது பால் பண்ணையில் இருந்து எந்த வாகனமும் வெளியே வரவில்லை உள்ளேயும் போகவில்லை
  2. பேச்சுவார்த்தைக்கு கூட்டுறவுத் துறையின் பால் அபிவிருத்தி அதிகாரி மற்றும் பால் பண்ணை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் இன்னும் பத்து நாட்களுக்குள் மானியத்தை போடுவதாகவும் புதிய மாடு பிடிப்பதில் அரசாங்கத்தோடு பேசி ஒரு முடிவை ஏற்றுவது என விலை உயர்வையும் அரசோடு பேசுவது என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்த அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது