February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையும், காட்பாடி வட்ட இந்தியன் 

ரெட்கிராஸ் சங்கமும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து 77வது குடியரசு தின நாளில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் அமைந்துள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து மாத விழா முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எம்.அம்பிகா, என்.வீரராகவன், ஜி.பிரியா, எம்.எஸ்.கருணாகரபிரகாண், ரெட்கிராஸ் நிர்வாககிகள் ஆர்.விஜயகுமாரி, ஆர்.சீனிவாசன், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.சுந்தரராஜன் கண் பரிசோதனை முகாமினை தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது…
விபத்துகள் குறைக்க வேண்டுமெனில் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இரு சக்ர வாகன ஓட்டிகள் தான் விபத்து காலங்களில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நிகழ்வுகளில் பாதசாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டுகின்றோம். மேலும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வித்து இல்லா வாகன போக்குவரத்திற்கு அனைவரும் இணைந்து செயலாற்றுவோம் என்றார்.
முகாமில் 200க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்களுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலாண்மைக்குழு உறுப்பினர் எ.ஶ்ரீதரன்ஜெயின், ஆர்.சுதாகர், பாபு, எஸ்.தைவிக், எஸ்.தன்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp